தொழில்நுட்ப ஆய்வுகூடக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு

unnamedஹாசிப் யாஸீன்

கல்முனை: கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் உள்ளிட்ட கல்விமான்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

unnamed

Published by

Leave a comment