Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொலிஸ் சித்ரவதைகள் குறித்த கவலைகள்

    கொழும்பு: இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்ரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து அது இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.

  • இரட்டைக் கொலை: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு செயலாளர் கைது

    ஆரையம்பதி: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவமொன்று தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  • மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட பேரணி

    கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணியினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மும்மொழியிலும் எழுதப்பட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர்.

  • முல்லைத்தீவில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    முல்லைத்தீவு: வடக்கு முஸ்லிம் மக்களை துரிதமாக தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு கோரி முல்லைத்தீவில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம், குமாரபுரம், முறிப்பு, முல்லைத்தீPவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸலிம்கள் கலந்துகொண்டனர்.

  • காத்தான்குடியின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக ஐ.தே.க.மாவட்ட அமைப்பாளருடன் காத்தான்குடி உயர்பீட ஐ.தே.க.உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

    – முகம்மட் சஜீ காத்தான்குடி: காத்தான்குடியின் எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் முன்ணடுப்புக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொழில் வேலை வாய்ப்பு மற்றும் எதிர் வரும் நகர சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அமைச்சர் சுவாமிநாதனின் இணைப்பாளர் சசிதரனின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சமீபத்தில் இடம் பெற்றது.

  • புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் சந்திப்பு

    கொழும்பு: மலேசியாவின் விசேட பிரதிநிதி டடோ செரி வுட்டாமா S.செமி வெல்லு, இலங்கைக்கான மலேசியாவின் தூதுவர் அஸ்மி ஜெயினுதீன், Dr. சுரேஷ் மாக்காண்டன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

  • முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு தினமாக ஒக்டோபர் மாதம்

    – அபூ அஸ்ஜத் மன்னார்: வடக்கிலிருந்து பாசிச பலிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நனவாக மாறும் நாள் எப்போது என்று ஏங்கித்தவிக்கும் நிலையினை இன்று எம்மால் காண முடிகின்றது. உலகலாவிய முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு தினமாக ஒக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.மக்கள் அழிவு மற்றும் சொத்தழிவுகளையும். இடம் பெயர்வுகளையும், அகதி வாழ்வனையும் பரிசாக கொடுத்த புலிகளுக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற போது,எவருக்கும் எந்த அநியாயத்தையும் செய்யாத கலிமாச் சொன்ன வடபுல முஸ்லிம்களின் அவலத்தை சித்தரிக்கும்…

  • இத்தாலி செல்லவிருந்த விமல் வீரவன்ச விமானநிலையத்தில் தடுத்து வைப்பு

    கொழும்பு: பழைய விமான கடவுச்சீட்டுடன் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

  • துறைமுக திறப்பில் 1 1/2 கோடி செலவில் நடன ஊழல்!

    அம்பாந்தோட்டை: அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுக திறப்பு வைபவத்தின் போது ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின்போது, நடன குழுவின் நடனம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், சன்ன விஜயவர்தன மற்றும் உபுலி விஜயவர்தன ஆகியோர் பாரிய ஊடல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (22) ஆஜராகியுள்ளனர்.

  • செங்கோலை தூக்கிச் செல்ல தினேஷ், விமல் சபையினுள் முயற்சி

    கொழும்பு: ஐ.நா மனித உரிமை பிரேரணை தொடர்பில் விமல் வீரவன்ச எம்பிக்கு பேசுவதற்கு நேரம் வழங்காததற்கு ஆட்சேபனை தெரிவித்து ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் செங்கோலை தூக்கிச்செல்ல முற்பட்டதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது. இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.மு)வின் உரையைத் தொடர்ந்தும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை பேசுமாறு சபைக்குத் தலைமைதாங்கிய ஐ.தே.கவைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் எம்பி அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

  • எகிப்தியப் பேரரசி கிளியோபாட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தாரா?

    லண்டன்: எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மன்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும் பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து ஆராய்ந்தனர்.

  • தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீனின் உடலா? பொலிசார் விசாரணை

    கொழும்பு: அண்மையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டியெடுக்கப்பட்ட உடல், மர்மமான முறையில் கொல்லப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடலா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக விசாரணை ஒன்றை நடத்திவருவதாக பொலிஸார் கொழும்பு குற்றவியல் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். மரபணு பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பொலிசார் தெரிவித்தனர்.

←Previous Page
1 … 300 301 302 303 304 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar