இத்தாலி செல்லவிருந்த விமல் வீரவன்ச விமானநிலையத்தில் தடுத்து வைப்பு

vimalகொழும்பு: பழைய விமான கடவுச்சீட்டுடன் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இத்தாலி செல்வதற்காக வந்த விமல் வீரவங்ச, தனது இராஜதந்திர கடவுச்சீட்டு காணாமல் போனதாக கூறி மற்றுமொரு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் விமான நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வீசா வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு, காணாமல் போன கடவுச்சீட்டு என்பதால், அவரை தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் விமான நிலைய இரகசிய பொலிஸ் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment