Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அகமட் முகமட் வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

    வொஷிங்டன்: தனது வீட்டில் தான் செய்த ஒரு கடிகாரத்தைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவந்து, அது ஒரு குண்டு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய முஸ்லீம் பதின்பருவ மாணவர் ஒருவர், அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு சென்று வந்திருக்கிறார்.

  • காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் ஓர் அங்கமாக இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 85 பேர் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர்.

  • கனவுகள்

    உம்மா உகண்டாவில் உழுந்து வடை சுடுவார் ஒபாமா திண்டு பார்த்து உறைப்பு என்று சொல்வார் அம்மிக்கு அடியாலே அனகொண்டா ஆ என்கும் கம்பெடுக்க ஓடையிலே கால்கள் கல்லாகும்

  • நூறாணியா பாலர் பாடசாலை 28 வது விளையாட்டு விழா

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி நூறாணியா பாலர் பாடசாலையின் 28 வது விளையாட்டு விழா தலைவர் எச்.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக புணரமைப்பு மீழ்குடியேற்ற ,ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்டார். புதிய காத்தான்குடி நூர் சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் நூறாணியா பாலர் பாடசாலை, 28 வது விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

  • நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!

    கொழும்பு: முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்குமிடத்தில் இருந்து இப்பொழுதே ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரைத் தொடர்புகொள்ளவும்..!

  • ஆஷுரா நோன்பும் அதன் படிப்பினைகளும்

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 16.10.2015, வெள்ளிக்கிழமை சுவனப்பாதை

  • ஜெனீவா தீர்மானத்துக்கு எதிரான கூட்டத்தில் சுதந்திரக் கட்சியினர்

    கொழும்பு: இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சில நடத்திவரும் கூட்டமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜெனீவா தீர்மானம் தொடர்பில், ஆளுங்கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

  • கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

    மட்டக்களப்பு: ‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்துகொண்ட இந்த செயலமர்வு விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

  • செஞ்சிலுவைச் சங்க அதிகாரியின் பாலியல் லஞ்சம்: இந்தியாவிடம் முறைப்பாடு

    வவுனியா: இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டச் செயற்பாட்டில் பயனாளியிடம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரியொருவர் பாலியல் லஞ்சம் கோரிய விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகத் தொடர்பு அதிகாரி மகீஸ் ஜொனி தெரிவித்தார்.

  • ஐரோப்பா எல்லைகளில் கடும் குளிரில் தவிக்கும் குடியேறிகள்

    ஜெனீவா: ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளன.

  • எக்னலிகொட காணமல் போனமை தொடர்பான வழக்கில் இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

    லங்காதீப : தமிழாக்கம் எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானிக்கும் எதிர்வரும் 30ஆந் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) கட்டளை பிறப்பித்துள்ளது.

  • உலகின் எந்த நாடுகளின் கடற்படை கலங்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம்

    கொழும்பு: சீனா உட்பட உலகின் எந்த நாடுகளின் கடற்படை கலங்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் ‘ஸ்டிரெயிட் டைம்ஸ்’ பத்திரிகைக்கைக்கு அளித்த பேட்டியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

←Previous Page
1 … 302 303 304 305 306 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar