Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ஹிஸ்புல்லாஹ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டாம்”- நஸீருக்கு பரீட் பகிரங்க வேண்டுகோள்

    முகம்மட் சஜீ காத்தான்குடி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1000 பாடசாலைகள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அப்போதய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தற்போத ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் முன்னய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இலங்கையின் எப்பாகத்திலும் அமைக்கப்படாத கூடுதலான எண்ணிக்கை கொண்ட இத்திட்டத்தினூடான கட்டிடங்கள் மட்டக்களப்பு காத்தான்குடி கல்விக் கோட்டத்திலேயே அமைக்கப்பட்டு அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

  • வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும்

    கலிஃபோனியா: உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது. மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது.

  • யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்

    யாழ்ப்பாணம்: வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு லட்சத்துக்குக் கிட்டிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

  • கிழக்கே கடும் மழை; இயல்புநிலை பாதிப்பு: ஜனாதிபதியின் விஜயம் ரத்து!

    மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணமும், சீரற்ற காலநிலை காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலக கருணா தீர்மானம்

    மட்டக்களப்பு: தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை, தன்னுடைய தனிப்பட்ட முடிவு என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் நான் இவ்வாறு செயற்படவில்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

  • “நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது அல்லாஹ்விடம் நெருக்கமாக இருக்க வேண்டும்”

    எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது அல்லாஹ்விடம் நெருக்கமாக இருக்க வேண்டும் அப்போதுதான் கஷ்ட நிலையின்போது அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்கும் என அஷ்ஷெய்க் ஏ.எம். அலியார் றியாதி தெரிவித்தார்.

  • ‘வார உரைகல்’ பெயரில் போலியான முகப்புத்தகம்! வாசகர்கள் அவதானமாக இருக்குமாறு பிரதம ஆசிரியர் வேண்டுகோள்!!

    ‘வார உரைகல்’ எனும் பெயரில் இங்கு காணப்படும் என்னால் வெளியிடப்பட்ட 253 மற்றும் 300வது ‘வார உரைகல்’ பத்திரகைகளின் முன்பக்கப் புகைப்படங்களுடன் முகப்புத்தம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக வாசகர்கள் பலரும் எனது கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

  • கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஓட்டமாவடியில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு!

    எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன் கிழமை ஓட்டமாவடியில் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஆயிரம் பாடசாலை நிகழ்ச்சி உள்வாங்கப்பட்டு மஹிந்தோய விஞ்ஞான ஆய்வு கூடம் என பெயரிடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

  • அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் 18 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

    சாய்ந்தமருது: அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்குட்ட விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சினூடாக 18 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். முதற்கட்ட மைதான அபிவிருத்தியின் பொருட்டு சாய்ந்தமருது, கல்முனைக்குடி பீச் றோட், மருதமுனை, கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை

  • சவுதியில் பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்

    றியாத்: சவுதி அரேபியாவின் நஜ்ரான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

  • முல்லை. முஸ்லிம் பாடசாலை பற்றி அவதூறாக பேசிய மௌலவி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்- ஜனோபர் NPC

    முஹம்மட் ரிபாக் முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலையொன்றில் மௌலவி ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் தின நிகழ்வில் நடனமாடியதாக மௌலவியொருவர் தெரிவித்த கருத்தை தான் வன்மையான கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் (ஜனோபர்) தெரிவித்தார்.

  • புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் ஒலிபெருக்கி சாதனம் (amplifier) திருட்டு

    எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனம் (amplifier) திருடப்பட்டுள்ளதாக அப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் ஏ.எல்.நௌபர் தெரிவித்தார். நேற்று காலை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர், பள்ளிவாயலினுள் சென்று குறித்த ஒலிபெருக்கி சாதனம் பொருத்தப்பட்டிருந்த அறையினுள் இறங்கி அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் இத் திருட்டு சம்பவத்துடன் ஒன்றுக்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

←Previous Page
1 … 298 299 300 301 302 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar