அம்பாந்தோட்டை: அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக திறப்பு வைபவத்தின் போது ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின்போது, நடன குழுவின் நடனம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், சன்ன விஜயவர்தன மற்றும் உபுலி விஜயவர்தன ஆகியோர் பாரிய ஊடல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (22) ஆஜராகியுள்ளனர்.
கணவன் மனைவியான குறித்த இருவரும் உபுலி கலை நிறுவனம் எனும் நிறுவனத்தை நடாத்திச் செல்கின்றனர் என்பதோடு, குறித்த நிகழ்விற்கு அவர்களது நிறுவனத்தினால் ஒன்றரை கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment