புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் சந்திப்பு

swami nathanகொழும்பு: மலேசியாவின் விசேட பிரதிநிதி டடோ செரி வுட்டாமா S.செமி வெல்லு, இலங்கைக்கான மலேசியாவின் தூதுவர் அஸ்மி ஜெயினுதீன், Dr. சுரேஷ் மாக்காண்டன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கை அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்திற்கு மலேசிய அரசாங்கத்தின் உதவிகளை எந்தவகையில் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

swami nathan

இந்நிகழ்வின் போது அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • ஏ.எல்.எம்.தாஹிர்

ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

Published by

Leave a comment