கொழும்பு: இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்ரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து அது இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்கான ஒரு சாதாரண வழியாக இலங்கை பொலிஸார் சித்ரவதைகளை பயன்படுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
Leave a comment