-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் இந்திய அதிகாரிகளால் மீட்பு!
இந்தியா: தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 இலங்கையர்களை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் கட்சி மாற விருப்பம்..?
-AF 47 கொழும்பு: ஆளும் அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, மாற்றுக் கட்சியுடன் கலந்தாலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத்திலிருந்து செய்திகள் சில தற்பொழுது கசிந்து வருகின்றன.
-
இந்தோனிஷியா, பபுவா நியூகினி ஆகிய நாடுகளில் நில நடுக்கம்!
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேஷியாவில் இன்று காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7.2 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகவும், சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
-
கட்டட நிர்மாண பொறியியல் துறையில் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் கூடுதல் வேலைவாய்ப்புகள்
கொழும்பு: இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் நிர்மாணத்துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிங்கப்பூரின் நிர்மாணத் துறை தொழிற்பயிற்சி நிறுவன மொன்று இன்று கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் திறந்து வைக்கப் படவுள்ளது.
-
க.பொ.த. சாதாரண தரம்: மே 10 வரை மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரவிடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2012 க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
-
நேற்று வெளியாகிய பெறுபேறுகளுக்கமைய காத்தான்குடி அல்மனார் மாணவர்கள் 100வீத சித்தி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நேற்று வெளியாகிய கல்விப்பெபாதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் 2012ம் ஆண்டு ஜீ.சீ.ஈ சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் 100வீத சித்தியயைப் பெற்றுள்ளதாக காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் அறபு மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) தெரிவித்தார்.
-
5000 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று மட்டக்களப்பில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5000 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பிரதான வைபவம் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள நாவற்குடா தருமரத்திணம் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிகிழமை காலை நடைபெற்றது.
-
மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாவில் இருந்து கடந்த ஆண்டு அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று 05.04.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளிவாயலில் பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.பதுருத்தீன் தலைமையில் இடம்பெற்றது.
-
மஹிந்த சிந்தனை 5000 ஆரம்பபாடசாலைகளைபுனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் கல்முனையில் வெற்றிகரமாக அமுலாக்கம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: 5000 ஆரம்பபாடசாலைகளை புனரமைக்கும் மஹிந்த சிந்தனை தேசியநிகழ்ச்சித் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் கல்முனைக் கல்விவலயத்திலுள்ள பாண்டிருப்பு அல் மினன் வித்தியாலயத்தில் புனரமைப்பு வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
-
ஆட்கடத்தல் தொடர்பான 5 ஆவது அமைச்சர் மட்ட மாநாடு இந்தோனேஷியாவில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இந்தோனேஷியாவின் பாலி நகரில் வார இறுதியில் நடைபெற்ற ஆட்கடத்தல் தொடர்பான 5 ஆவது அமைச்சர் மட்ட மாநாட்டில் இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், அருகில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர். மன்சூர், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) அனூஷா முனசிங்க ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
-
இரு நாள் உற்பத்திப்பொருட் கண்காட்சி
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிரான்: அம்கோர் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிரான் பூலாக்காடு கிராமத்தினைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள் உற்பத்திப்பொருட் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் (04.04.2013 ம் திகதி) முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
பொது பல சேனவுக்கெதிராக கண்டனத் தீர்மானம் கிண்ணியா நகரசபையில் நிறைவேற்றம்
– ரைஸ் கிண்ணியா: பொது பல சேனா என்ற இயக்கம் பௌத்த மதத்திற்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் ஏனைய இனத்திற்கும் எதிரான இயக்கமாக உருவெடுத்து வருகின்ற நிலையில் அவற்றை தடைசெய்யக்கோரி கிண்ணியா நகரசபை கூட்டத் தொடரின் போது தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.