5000 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று மட்டக்களப்பில்

???????????????????????????????
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5000 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பிரதான வைபவம் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள நாவற்குடா தருமரத்திணம் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிகிழமை காலை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.டேவிட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதா உட்பட அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

இதன்போது இத்திட்டத்தின் கீழ் இப்பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளுக்கான நினைவுப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை சுவர்களுக்கு வாண்ம் பூசும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் மரக்கண்டுகளும் நடப்பட்டன.

5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் கட்டத்தில் 70 பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 9 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

 ???????????????????????????????

இதன் ஒவ்வொரு பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் ஐந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

Published by

Leave a comment