க.பொ.த. சாதாரண தரம்: மே 10 வரை மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Sri-Lanka-goverment-logo2[1]கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரவிடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2012 க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மே மாதம் 10ம் திகதிவரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மூலம் தங்களது விண்ணப்பத்தை அனுப்பி வைக்க முடியும். தனியார் பரீட்சார்த்திகள் நேரடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

2012 க.பொ. த. சாஃத பரீட்சை பெறபேறுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

-தினகரன்

Published by

Leave a comment