சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் இந்திய அதிகாரிகளால் மீட்பு!

NewZealandSharkAttack074825--525x400இந்தியா: தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 இலங்கையர்களை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் தென்காசி, கடைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அகதி முகாங்களில் இருந்த இலங்கை தமிழ் அகதிகள் 120 பேர் ஆழ்கடல் வள்ளமொன்றில் அவுஸ்திரேலியா செல்ல புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு நாகபட்டினம் அருகே சர்வதேச கடல்பரப்பில் சென்று கொண்டிருந்த போது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச் செய்தியை அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்றுக் காலை சர்வதேச கடல் எல்லையில் 120 பேரையும் மீட்டு கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் கரைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். 

– தினகரன் –

Published by

Leave a comment