மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா

???????????????????????????????
BY: FM. Farhan

– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாவில் இருந்து கடந்த    ஆண்டு அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று 05.04.2013 வெள்ளிக்கிழமை  மாலை 4 மணிக்கு பள்ளிவாயலில்  பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.பதுருத்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமாத் தலைவர் மௌலவி. அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி), முஹைதீன் மெத்தைப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி .ஏ.ஜி.எம். அமீன் (பலாஹி),  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய பொறுப்பாளர் அஷ்.ஷெய்க். ஏ.எல்.எம்.ஜுனைதீன்(நளீமி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), பள்ளிவாயல் நிருவாக  சபை உறுப்பினரும், விழா ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்தவருமான மௌலவி. அல்ஹாஜ். எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) மற்றும் பல உலமாக்களும், ஊர்பிரமுகர்களும், பள்ளிவாயல் நிருவாகிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவ மாணவிகளுககு சாண்றிதழ்களும் பரிசில்களும் வங்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment