கல்முனை: 5000 ஆரம்பபாடசாலைகளை புனரமைக்கும் மஹிந்த சிந்தனை தேசியநிகழ்ச்சித் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் கல்முனைக் கல்விவலயத்திலுள்ள பாண்டிருப்பு அல் மினன் வித்தியாலயத்தில் புனரமைப்பு வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அல்-மினன் வித்தியாலய அதிபர் எம். ஜேஅப்துல் ஹசீப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலைப் புனரமைப்பு பணிகளை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வேலைகளை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறைமாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.வேகானந்தராசா, கல்முனைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மு.ராசதுரை, உதவிக் கல்விப் பணிப்பாளர் சக்காப், விவசாயத் திணைக்கள போதனாசிரியர் எஸ். சசிந்திரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர், ஹலிமுத்தீன், பாடசாலைஅபிவிருத்திச் சங்கச் செயலாளர் பௌசிமற்றும் அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்கள் பெற்றோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் திவிநெகும திட்டத்தின் கீழ் பழமரக் கன்றுகள் வினியோகம், பழ மரநடுகை, பாடசாலைக்கு வர்ணம் தீட்டுதல் போன்றநடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இத்தேசியநிகழ்ச்சிதிட்டமானது அம்பாறைமாவட்டத்தில் 27 பாடசாலைகளில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment