கிழக்கில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் ‘ஸ்கோர் போர்ட்’ புள்ளிப்பலகை அட்டை அறை மட்டக்களப்பில் திறப்பு

DSC00025[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்கோர் போர்ட் புள்ளிப்பலகை அட்டை அறையொன்று திறந்து வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,கௌரவ அதிதியாக ஐக்கிய இராச்சிய தமிழர் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத் தலைவர் எட்வின் குணரத்னம்,மட்டக்களப்பு பழைய மாணவர் ஒன்றியத் தலைவரும் வவுணதீவுப் பிரதேச செயலாளருமான கே.தவராஜா, சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவரும் தொழிலதிபருமான மீராசாகிப் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள்,அதன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,தொழிலதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 17இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  ஸ்கோர் போர்ட் புள்ளிப்பலகை அட்டை அறை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு சமய அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

17இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த ஸ்கோர் போர்ட் புள்ளிப்பலகை அட்டை அறை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய இராச்சிய தமிழர் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம்,மட்டக்களப்பு கஷ்டப்பிரதேசங்களுக்கான சமூக அபிவிருத்தி மையம்,ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியம், மட்டக்களப்பு பழைய மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புக்கள் நிதியுதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC00004[1]

DSC00016[1]

DSC00025[1]

Published by

Leave a comment