லண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடுமாறியதுடன், இவரது இரசிகர்களும், இங்கிலாந்து மக்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
6 மாத கால விடுமுறைக்கு டியூனிசியாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த கார்ளி வட்ஸ், அங்கு ஓர் முஸ்லிம் உயிர் காப்பாளரான (Life Guard) முகம்மட் சலாஹ் என்பவருடன் காதல் கொண்டார்.
இதுவரை காலமும் எனது பெண்மையை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் வருந்துவதாகவும் முன்னாள் ஆங்கில மொடலிங் கவர்ச்சி நாயகியான கார்ளி வட்ஸ் தெரிவித்தார்.
‘எனது அகன்ற மார்புகளை உலகத்துக்கு காட்டியதையும், எனது இடுப்பிற்குக் கீழ்பாகங்களை இரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் காண்பித்து வாழ்ந்த எனது பெண்மையை நினைக்கையில் நான் அழுகிறேன்‘ எனத் தெரிவித்தார்.
‘தினமும் இரு வைன் போத்தல்கள் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது. குடித்த பின்னர் நான் என்ன செய்கிறேன், என்னை யார் தொடுகிறார்கள் என்றெல்லாம் என்னால் ஊகிக்க முடியாமல் இருந்தது. எனது புகைப்படங்களும், வீடியோக்களும் பல மில்லியன்களை எனக்குக் கொட்டின. அவை என் மரணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு என்றும் உதவப் போவதல்லை‘ என்றார்.
மேலும், ‘குடும்ப வாழ்க்கை மிக இனிமையானது. ஆங்கிலப் பெண்களின் குடும்ப வாழ்வு சுயநலமானது. தனக்கு விரும்பயவர்களுடன் இரவைக் களிப்பதற்கு தயங்காதவர்கள். இப்படியான வாழ்க்கையில் இருந்த எனக்கு இஸ்லாம் தெளிவான பாதையைக் காட்டித்தந்தது‘.
‘மாலை நேரங்களில் பெண்களோடு உட்கார்ந்து பல விசயங்களைப் பேசுவோம். இங்கிலாந்தில் மாலை வேளையில் மதுபானம் தான் எங்களுக்குத் தேவை. மதுபானம் அருந்தினால் தேவை இல்லாத சண்டைகளும், பிளவுகளும் எங்களுக்குள் ஏற்படும். ஆனால் நான் இங்கு வந்ததும் முதலாவது மதுபானத்தை விட்டுவிட்டேன். என்னை இஸ்லாம் மாற்றியது‘.
‘மாலை வேளையில் பெண்களோடு கோப்பி கடைகளுக்கு (Coffee Shop) செல்வோம். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்போம். பெண்களுக்கு வேறு, ஆண்களுக்கு வேறு என இடங்கள் ஒதுக்கப்ட்டிருக்கும். இஸ்லாம் பெண்மையை எந்தளவு மதிக்கின்றது என்பது 6 மாத காலத்துல் எனக்கு டியூனிசியா கற்றுத்தந்தது‘ என தனது விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.
‘மெல்லிய நூலால் மார்பகத்தின் நடுப்பகுதியை மட்டும் மறைக்கும் மேலாடையையும், அதே போலுள்ள கீழாடையையும் அணிந்து இரவு விடுதிகளில் நான் ஆட்டம் போடுவேன். எனக்காக– எனக்காகவே உயிரை விடும் ஆயிரம் இரசிகர்கள் இருக்கின்றனர்‘.
‘நான் எப்போது முகம்மதுடன் பழக ஆரம்பித்தேனோ, அப்பொழுதே என்னுள் அமைதி ஏற்படுவதையும், ஏதோ மாற்றம் ஏற்படுவதையும் உணர்ந்தேன். ஆங்கிலக் காதல் நிலையற்றது. எடுத்தவுடன் படுக்கைக்குச் செல்லத்தூண்டும். ஆனால் எனக்கு இங்கு அந்த எண்ணமே தோன்றியதில்லை‘!
‘முகம்மதிற்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது, ஏதோ ஓர் கலப்பு மொழியில் ஆங்கிலத்தைப் பேசுகிறார். கொஞ்சம் பிரன்ஸ் பாசையும் அவருக்குத் தெரியும். என்றாலும் நான் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறேன்‘.
‘காதல் நீடித்துச் சென்ற போது, நான் உங்களை திருமணம் முடிக்க விரும்புகிறேன் என முகம்மட் என்னிடம் தெரிவித்தார். நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எங்கள் நாட்டில் திருமணம் என்பது பொதுவாக மரணத் தருவாயில்தான் செய்துகொள்வோம்‘.
‘எனினும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை நான் இங்கு அறிந்து கொண்டேன். ஒவ்வொருவருக்கும் அழகிய குடும்பமும், குழந்தைகளும் விருந்தோம்பல்களும், இவ்வாறு இனிமையாக இருக்கின்றனர். முகம்மட் என்னிடம் தெரிவித்த திருமண விருப்பத்திற்கு நான் சம்மதித்தேன்‘.
‘உலகில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். தீவிரவாதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்‘.
‘நான் அரை பாவாடையும் (Short Skirt) ஒரு மெல்லிய ரீசேர்ட்டும் அணிந்து முகம்மதின் வீட்டிற்கு முதன் முதல் சென்றேன். எனது வரவைக் கேள்விப்பட்டு, சுமார் 30 பேர்கள் அளவில் அங்கு குழுமியிருந்தனர். அவர்களுள் பலர் என்னை அடையாளம் கண்டு எனது பேரைச் சொல்லி நீங்களா இது எனக் கேட்டனர். ஓர் ஆங்கிலப் பெண், அழகான பெண் என அவர்கள் சொல்வது எனக்குள் புரிந்தது‘.
‘பெண்கள் மார்பகங்களையும்,தலையையும் மறைத்து என் முன் நின்றனர்.எனக்குள் வெட்கம் ஏற்பட்டது‘.
‘எனது வாழ்க்கையில் இப்படியொரு அமைதி சூழலை நான் எங்கும் பார்த்ததில்லை. குடும்ப வாழ்க்கைக்கு என்றால் அது இஸ்லாம்தான்‘.
‘குடியும் இல்லை, சண்டையும் இல்லை. ஆண்கள் சீசா எனும் புகையை புகைக்கின்றனர்.அவர்கள் புகைத்தால் அவர்களில் மயக்கத்தைக் காணமுடியவில்லை. சில நேரங்களில் விரிப்புக்களில் உட்கார்ந்து சீட்டு விளையாடுகின்றனர்‘.
‘மக்களை மதிக்கின்றனர். எனக்கு வெளியில் போவதை விட பெண்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே பெரும் விருப்பம்‘.
ஓர் ஹிஜாப் அணிந்த பெண்ணாக தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பி இருக்கும் ஆங்கில மொடல் அழகியாக இருந்த கார்ளி வட்ஸ், இஸ்லாத்தை தற்பொழுது படிக்கின்றார். இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டதும் தாங்கள் திருமணத்தில் இணையவிருக்கும் நற்செய்தியைத் தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆங்கில ஊடகங்களுக்கு சென்ற வார இறுதியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று, உலகில் இஸ்லாமியர்கள் குழுக்களாக பிளவுபட்டு தங்களைத் தாங்களே அடித்து கொன்று குவிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், இப்பெண்மணியின் இஸ்லாமிய நுழைவு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஓர் படிப்பினையாகட்டும்!
ivar muslimane pirehu ivarin maanaththai kaappathu emathu kadamayum koode enave,avarin palaye photokalai mutrumuluthaha update seivathai thavirnthu konlvathe emathu kadamai..avarin mudi thodekkam anaithu uruppum maraikappade vendiyethu..
MAASHA ALLAH
Its better If you remove sexually explicit photos…
Masha Allah
masha Allah
al hamthu lillah
Masha Allah
neegal idhil ulla awarhalin palaya photovai delete seidhidugal……..
allahumma bariklakum aameen