சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா இனிதே நிறைவு

shilpa– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி கூடத்தில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி விழாவானது நேற்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மென்மேலும் நவீனத்துடன் மேம்படுத்தும் அதேவேளை, துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இவ்விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டுடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஒழுங்கமைப்பு செய்திருந்த இந்நிகழ்வில் தேசிய வடிவமைப்பு நிலையம், கைத்தொழில் அபிவிருத்தி சபை, பனை அபிவிருத்தி சபை மற்றும் கித்துளும் இணை பங்களிப்பை வழங்கியிருந்தன.

120 ற்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களில் ஆக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்பிரகாரம் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் பிரதம விருந்தினராக சுசில் பிரேமஜயந்த அவர்களும், மூன்றாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ஷ அவர்களும் நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களும் ஏனைய அமைச்சர்களும் கலந்து கொண்;டு சிறப்பித்தனர்.

இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை நடைபெற்ற சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழாவின் நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையே குறித்த விழாவையொட்டி நடத்தப்பட்ட ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன சான்றிதழ்களையும் பணப்பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

இவ்வாறு மேற்படி விழாவுக்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைசார்ந்தோர் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

shilpa

ddd2013 01[1]

addddddddddddddd2013 07[1]

Published by

Leave a comment