காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதம் – பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை

kattankudy (4)– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதோடு நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்போது காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதிதயொதுக்கீட்டில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kattankudy (2)

kattankudy

kattankudy (3)

kattankudy (4)

Published by

Leave a comment