கெய்ரோ: எகிப்து முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மட் பதி சற்று முன்னர் எகிப்து விசேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நஸ்ர் எனும் நகரில் வசித்து வந்த இவர் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. முகம்மட் பதியின் மகன், அம்மார் பதி (38), ஆறு வாரங்களாக இடம்பெறும் இக்கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தார்.
கலகத்தைத் தூண்ட முயற்சிக்கும் முஸ்லிம் சகோதரத்துவக்கட்சியின் ஏனைய ஆதரவாளர்களும் மென் மேலும் கைது செய்யப்படுவார்கள் என எகிப்தின் விசேட படைப்பிரிவு எச்சரித்திருக்கின்றது.
இதுவரையிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு, நூற்றுக்கணக்காணவர்கள் கைது செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது ஓர் இஸ்லாமிய நாடு.


Leave a comment