பெனசீர் கொலை தொடர்பில் முஷாரஃப் மீது குற்றச்சாட்டு

19-musharraf13-300[1]கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இல் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், தன் மீது சுமத்தப்பட்ட, சதி, கொலைக்கு உதவுதல், போதுமான பாதுகாப்பை வழங்காமை, தடய  ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் அல்லது தற்போது பதவியில் இருக்கும் ஒரு இராணுவ தளபதி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது இதுதான் முதல் தடவையாகும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 4 பேர், 2 மூத்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

-BBc

Published by

Leave a comment