Category: Your Kattankudy
-
மோடி வருகைக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறுப்பு கொடி போராட்டம்: 500 பேர் கைது
-SHM சென்னை: தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க வரும் நரேந்திர மோடிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
கென்யா தாக்குதல் தொடர்புடைய பிரித்தானியப் பெண்ணுக்கு இன்டர்போல் வலைவிரிப்பு!
– MJ லண்டன்: கடந்த சனிக்கிழமை கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற அப்பாவி மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல் சம்வத்திற்கு பின்னின்று செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் பிரித்தானியாவியைச் சேர்ந்த சமந்தா லீத் வைற் எனும் விதவைப் பெண்ணை கைது செய்வற்கு இன்டர்போல் வலை விரித்திருக்கின்றது.
-
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேகப்பாதை விரைவில் மக்கள் பாவனைக்கு
கொழும்பு: தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக போக்குவரத்து பாதை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. கடல் மணலை பயன்படுத்தி இயற்கையான சூழலுடன் இலங்கையில் அமைக்கப்படுகின்ற இரண்டாவது அதிவேக போக்குவரத்து வீதி இதுவாகும்.
-
வாழைச்சேனையில் மீனவர் ஒருவரின் வலையில் பிடிபட்ட 1500 கிலோ எடைகொண்ட புலிச்சுறா!
வாழைச்சேனை: வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் 1,500 கிலோ கிராம் எடையுடைய பெரிய புலிச்சுறா மீன் ஒன்று நேற்று அகப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. குறித்த புலிச்சுறா மீன் அண்ணளவாக 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் கொண்டுள்ளது என குறித்த படகின் உரிமையாளரான ஏ.எல்.எம்.முபாறக் தெரிவித்தார்.
-
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு:12 பேர் சுட்டுக்கொலை
– SHM ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லைப் புறத்தில் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகள் 30 பேரை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அதில் 12 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை: அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம்!
கொழும்பு: இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், ஜனாதிபதி தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
-
சவூதி அரேபிய மத விவகார, முஸ்லிம் சமய கலாசார அலுவல்களுக்கு பொறுப்பான உதவி அமைச்சர் காத்தான்குடி விஜயம்-நிர்மாணிக்கப்படவுள்ள இஸ்லாமிய நூதனசாலை தொடர்பாகவும் ஆராய்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவூதி அரேபியாவின் மத விவகார மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்களுக்கு பொறுப்பான உதவி அமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமான அஷ்ஷெய்க் அப்துல் கரீம் இப்றாகீம் இன்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
-
கென்யா தாக்குதல்! பிரிட்டன் நபர் கைது
நைரோபி: கென்யாவில் நடந்த பயங்கர தாக்குதல் தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாக கட்டடத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
-
காஷ்மீரில் இராணுவம்-போராளிகள் மோதல்: 6 பொலிஸார் பலி!
கதுவா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தை காஷ்மீரில் இராணுவம்-போராளிகள் மோதல் அடுத்தடுத்துத் தாக்கியதில் ஆறு பொலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
-
‘சிறப்பான கூட்டமொன்றை எவ்வாறு நடாத்துவது’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிறப்பான கூட்டமொன்றை எவ்வாறு நடாத்துவது’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு நேற்று புதன்கிழமை காத்தான்குடி நகரசபை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நகரசபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
-
460 கோடி வயதையுடைய வால் நட்சத்திரம்: 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் எம் கண்களுக்குத் தோன்றுகிறது!
திருப்பூர்: ஐசான் என்ற புதிய வால் நட்சத்திரம் எதிர்வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும் சூரியன் தோன்றிய போது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கும்.