காத்தான்குடி: கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிறப்பான கூட்டமொன்றை எவ்வாறு நடாத்துவது’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு நேற்று புதன்கிழமை காத்தான்குடி நகரசபை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நகரசபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் வளவார்களாக அட்டாளைச்சேனை சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இக்ராம், செங்கலடி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் துஷியந்தன் கலந்து கொண்டு கூட்டத்தை தயார்படுத்தல், கூட்டம் நடத்துபவர்களின் பங்கு, கலந்து கொள்ளும் பங்குபற்றுபவர்களின் பங்கு,வினைத்திறனான அவதானிக்கும் ஆற்றல், இணங்கச் செய்யும் வகையில் பேசுதல், கூட்ட அறிக்கை எழுதுதல் என்பன தொடர்பில் விரிவுரைகளை நடத்தினர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி நகர சபை பதில் தவிசாளர் ஜெஸீம் ஜேபி, காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், காத்தான்குடி நகரசபை உத்தியோகத்தர்கள்,மற்றும் வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டமொன்றை எவ்வாறு நடாத்துவது தொடர்பான செயலமர்வின் இறுதியாக கூட்டமொன்றும் நடாத்தி ஒத்திகை பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment