கென்யா தாக்குதல்! பிரிட்டன் நபர் கைது

kenya-attack[1]நைரோபி: கென்யாவில் நடந்த பயங்கர தாக்குதல் தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாக கட்டடத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் 67 பேர் உயிரிழந்தனர்.

மேலும், சுமார் 200 பேர் காயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் 63 பேரை காணவில்லை என அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வணிக வளாகத்தின் பெரும் பகுதிகள் இடிந்துவிட்டன. இதனால், கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளுடன் நடத்திய 80 மணி நேர தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவாக கென்யாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் நைரோபியில் இருந்து துருக்கி நாட்டிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து அரசு தரப்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Ls

Published by

Leave a comment