காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய நாட்டின் முக்கிய பிரமுகர்கள், ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம். அஹமட் அப்கர், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் உட்பட அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முதற்கட்டமாக 10 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment