லண்டன்: கடந்த சனிக்கிழமை கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற அப்பாவி மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல் சம்வத்திற்கு பின்னின்று செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் பிரித்தானியாவியைச் சேர்ந்த சமந்தா லீத் வைற் எனும் விதவைப் பெண்ணை கைது செய்வற்கு இன்டர்போல் வலை விரித்திருக்கின்றது.
29 வயதுடைய சமந்தா, ஜூலை 2005 லண்டனில் இடம்பெற்ற 4 தற்கொலை குண்டுதாரிகளுள் ஒருவரது மனைவி எனக் கண்டறியப்பட்டிருக்கின்றது.
சோமாளிய இஸ்லாமியப் போராட்டக் குழுவானா அல்-ஷபாப் போராளிகளுடன் சமந்தாவுக்கு தொடர்பிருப்பதாகவும், இவரது பின்னணியிலேயே குறித்த நைரோபி ‘மோல்’ தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையின் பேரில் தெரிய வந்திருக்கின்றது.
நைரோபி ‘மோல்’ தாக்குதல் சம்பவத்தில் அப்பாவிப் பொதுமக்கள் 67 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களுள் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
ஜூலை 2005, லண்டன் தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் பிரித்தானியாவிலிருந்து தலைமறைவாகியிருக்கும் சமந்தாவுக்கு தற்பொழுது இண்டர்போல் ‘தேடப்படும் நபர்’-Wanted Person’ என சற்று முன்னர் அறிவித்திருக்கின்றது.


Leave a comment