Category: Your Kattankudy
-
ஊழல் மிகுந்த அரசாங்கத்தை துரத்துவதே எமது நோக்கமாகும்- சரத்பொன்சேகா
கொழும்பு: எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்களே ஆகின்றன. ஆனால் வடமேல் , மத்திய மாகாண மக்கள் 5 உறுப்பினர்களை எமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் வாக்குகளை இழந்துள்ளன. ஆனால் நாம் புதிய வாக்கு வங்கியினை உருவாக்கியுள்ளோம் என்று ஜனநாயகக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார்.
-
அய்யூப் அஸ்மினுக்கு 1009 விருப்பு வாக்குகள்
மன்னார்: நடைபெற்ற வட மாகாணசபைக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்கள் 1009 வாக்குகளைப் பெற்றுள்ளார். நேற்று மாலை மன்னார் தெரிவத்தாட்சி அலுவலர் வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு இலட்சத்து 70,000 வாக்குகள் நிராகரிப்பு
கொழும்பு: வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது. அளிக்கபட்ட வாக்குகளில் கண்டி மாவட்டத்தில் வட மாகாணத்திலும் கூடுதலான 7.25 வீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களிலும் 4459 தபால் மூல வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
வடக்கில் சராசரி 68% வாக்குப் பதிவு: வடக்கு மக்களின் ஜனநாயக விருப்பத்தை உறுதி செய்கிறது
கொழும்பு: நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக 68 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மக்களுக்கு உள்ள ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை உறுதி செய்வதாக அமைகிறதென ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்: வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு
கொழும்பு: புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகின்றோம்.
-
தமிழ் தேசிய கூட்டமமைப்புக்கு ரவூப் ஹக்கீம் பாராட்டு
கொழும்பு: நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையிட்டு பாராட்டு தெரிவிப்பதோடு மூன்று சபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கு வாக்களித்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.
-
13வது அரசியல் சட்டத்தை அமுல்படுத்துவோம்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி!
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து, 13வது அரசியல் சட்டத்தை அமுல்படுத்த உறுதியாக இருப்பதாக தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்லார். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட மாகாண சபைக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று தேர்தல் நடைபெற்றது.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 2
ஆசிர் மிஸ்வாக் பாவனைக்கு இஸ்லாம் கூறும் வரைவிலக்கணம் (A Small Stick Used for Cleaning and polishing The Teeth) பற்களைத் துப்பரவு செய்து அவற்றை அழகுபடுத்தப் பயன்படும் சிறிய குச்சிக்கு மிஸ்வாக் என்று சொல்லப்படும்’. அறிஞர் பெருமக்களில் ஒரு சாரார் கூறுகின்றனர் பற்களில் உள்ள மஞ்சற்கறைகள்
-
வடமாகாண சபை தேர்தல் முடிவடைந்து சில மணித்தியாலயங்கள் செல்வதற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்க கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்!
அபூ அஸ்ஜத் மன்னார்: மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை வேளை தாராபுரம் கிராமத்துக்குள் புகுந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய தாகுதலில் இருவர் காயங்களுக்குள்ளானதாகவும், 2 வாகனங்கள் மற்றும் 3 முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளன
-
மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாம் அதை வரவேற்போம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பழுளுல்லாஹ் பர்ஹான் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டுமென்றும், அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான
-
தந்தையை இழந்த சிறுவர்களுக்கான நிதி வழங்கும் வைபவம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜம்இய்யதுஸ் ஸபாப் அனுசரனையுடன் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த 36 சிறுவர்களுக்கான பராமரிப்பு நிதி வழங்கும் நிகழ்வு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் கடந்த (19.09.2013) காலை 10.00