திருப்பூர்: ஐசான் என்ற புதிய வால் நட்சத்திரம் எதிர்வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும் சூரியன் தோன்றிய போது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும் போது சூரியனை உரசிச் செல்வது போல் தோன்றும், அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
சிதறாமல் நுழைந்து விட்டால், இந்த நூற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.
Leave a comment