காஷ்மீரில் இராணுவம்-போராளிகள் மோதல்: 6 பொலிஸார் பலி!

indiaகதுவா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தை  காஷ்மீரில் இராணுவம்-போராளிகள் மோதல் அடுத்தடுத்துத் தாக்கியதில் ஆறு பொலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்,  அங்கிருந்த 6 பொலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளனர்.

அதேபோல், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் நடத்தப் பட்ட தாக்குதளில் சிக்கி காவலர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதில் இரண்டு போராளிகளும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பா ராணுவ முகாமில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாக சம்பா எஸ்.பி தெரிவித்துள்ளார். இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஜம்மு-பதன்காட் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment