மட்டக்களப்பு: இலங்கையில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் கடந்த (25) வெள்ளிக்கிழமை நாடலாவிய ரீதியில் பாரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கமைய ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் விழிப்புணர்வு ஊர்வலம், அன்ரைய தினம் (25.10.2013) பி.ப. 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், கல்லடி, பிள்ளையாரடி, திருமலை வீதி போன்ற பல்வேறு இடங்களில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுருத்தல்கள் வழங்கப்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் இலங்கையின் பல பாகங்களிலும் இதுபோன்ற சமூகநல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment