Category: Your Kattankudy
-
26 ஆம் திகதி சனிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும்-கல்வி அமைச்சு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நோக்கமாக கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் கடந்த 16 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்பட்டதன் காரணமாக
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஒன்று கூடல் வைபவமும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் வைபவமும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் இஸட் எம். சஜி தலைமையில் நடைபெற்றது.
-
அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பது பெரும் ஆபத்து!
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இஸ்லாம் காட்டிய அனைத்து சட்டங்களும் மனிதனின் ஈருலக வெற்றிற்குக் காரணமாகும் என்பதில் ஐய்யமில்லை. அந்த தூய சட்டங்களில் ஒன்றுதான் அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த தடையாகும். அதுவும் சகோதரரின் மனைவியுடன் இருப்பது பெரும் ஆபத்து என்றார்கள் இறுதித் தூதர் நபி(ஸல்)அவர்கள்.
-
கல்முனை மேயர் பதவியை ராஜினாமா செய்வதில்லை – மேயர் வீட்டுக் கூட்டத்தில் பிரகடனம்!
AGM. Aasath கல்முனை: கல்முனை மாநகர மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்யக் கூடாது என அவரது ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று இரவு மேயரின் சாய்ந்தமருது இல்லத்தில் மேயர் சிராஸ் தலைமையில் நடை பெற்ற அவசர கூட்டத்தில் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்கள் இதனை நாரே தக்பீர் கோஷத்துடன் பிரகடனம் செய்துள்ளனர்.
-
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 310 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாலங்களும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான கட்டடத் தொகுதியும் திங்கட்கிழமை திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 310 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாலங்களும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான கட்டடத் தொகுதியும் எதிர்வரும் 28ம் திகதி திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
-
விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வு – மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். காத்தான்குடியில் இயங்கும் கிழக்கிலங்கை ஸாஹிறா விசேட பாடசாலை
-
கிழக்கிழங்கை ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களின் ஆக்கத் திறன் கண்காட்சியும் விற்பனையும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலையின் 2013ம் ஆண்டிற்கான விசேட தேவையுடையோரின் ஆக்கத் திறன் கண்காட்சியும் விற்பனையும் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
-
காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஐக்கிய நாடுகள் சபை தினம்
KCC Media Unit காத்தான்குடி: ஐக்கிய நாடுகள் சபை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஐ.நா. சபை தினம் இன்று 25.10.2013 அன்று கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உயர்தரப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கப்டன் ULA. முபாறக் அவர்கள்
-
பாராளுமன்ற அமர்வுகள் நேரடி ஒலி-ஒளிபரப்பு!
கொழும்பு: பாராளுமன்ற அமர்வுகளை இன்னும் ஒரு மாத காலத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக நேரடியாக ஒளி, ஒலிபரப்புச் செய்ய உள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நேற்று பாராளுமன்ற வாகன தரிப்பிட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அகன்ற திரையினூடாக நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.
-
கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு
கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
-
காலை 10:30 மணியாகியும் வாசிகசாலை திறக்கப்படாத அதிசயம்!!
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான மாஞ்சோலை 207ஏ கிராம சேவையாளர் பிரிவில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை கிராம பொது நூலகம் இன்று புதன்கிழமை 23.10.2013 காலை 8.00 மணிக்கு திறக்கவேண்டிய போதும் காலை 10.30 மணியாகியும் நூல் நிலையம் திறக்கப்படவில்லை.
-
திருகோணமலையில் ‘ சமய படிப்பிணைகளின் அடிப்படையில் மனித மாண்மையை பாதுகாத்தல் ‘ செயலமர்வு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை எகெட் கரிட்தாஸ் நிறுவனத்தினால் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குள் அடங்கும் சிங்களப் பாடசலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறி வகுப்பினை நடாத்தும் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் மத்தியில் மனித மாண்மையை பாதுகாத்தல் தொடாபாக பயிலுனர் பயிற்சி பட்டறை (23.10.2013)