கொழும்பு: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மையில் இடம்பெற்றது. களனி பாலத்திற்கு அருகில் இருந்து கண்டி வீதியின் நுழைவாயிலில் ஆரம்பமாகும் 25.8 கிலோ மீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுநாயக்க விமான நிலைய த்தில் முடிவடைகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு குழுமியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வரலாற்றில் இப்போது புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்று கூறினார்.
1960ம் ஆண்டு தசாப்தத்தில் இருந்து இந்த அதிவேக நெடுஞ் சாலையை அமைப்பதற்கு இலங்கையில் அதிகாரத்தில் வீற்றிருந்த பல்வேறு அரசாங்கங்கள் முயற்சிகள் எடுத்த போதிலும் அவை வெற்றியளிக்காத காரணத்தினால் இதன் நிர்மாண வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன. அப்போது இலங்கையின் பொரு ளாதாரம் பலவீனமுற்றிருந்த காரணத்தினால் அதிவேக நெடுஞ் சாலை அமைக்கும் முயற்சி வெற்றியடையவில்லை என்றும் ஜனா திபதி கூறினார்.
கொட்டாவையில் இருந்து காலிக்கு அமைக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலை ரி1 என்றும் கட்டுநாயக்க நெடுஞ்சாலை ரி3 என்றும் அழைக்கப்படுகிறது. கட்டுநாயக்க நெடுஞ்சாலையை கொழும்பு புறநகர் பகுதியூடாக இணைக்கும் பாதை ரி2 என்றும் அழை க்கப்படுகிறது. அந்தப் பாதை தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கண்டி, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு நகரங்களுக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் மிக விரைவில் ஏற்படுத்தப்படும்.
ரி3 நெடுஞ்சாலையை அமைப்பதற்கு சீன அரசாங்கம் நிதி உதவி உட்பட பல்வகையிலும் உதவியிருக்கின்ற போதிலும் இதன் மூலம் கிடைக்கும் முழு வருமானம் இலங்கை அரசாங்கத்தையே சென்ற டையும். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நீர்கொழும்பை அடுத்துள்ள கடல் ஏரிக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டிரு ப்பது ஒரு ரம்யமான காட்சியாக அமைந்துள்ளது. இந்த அழகை கண்டு ரசிப்பதற்காக மாத்திரம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் எங்கள் நாட்டுக்கு நிச்சயம் வருகை தருவார்கள் என்று இங்கு உரையாற்றிய சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையின் கடந்த கால நிகழ்வுகள் பற்றி விளக்கிக் கூறிய ஜனாதிபதி அவர்கள், 30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எந்த கல்வெட்டு கண்ணிவெடி வைத்து தகர்க்கப்படும் என்பதை எவரும் அறிந்திருக்க வில்லை. இத்தகைய தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கையின் நிகழ்வு களை வைத்து சில வெளிநாடுகள் வேண்டுமென்றே எமக்கு அழுத்தங்களை கொண்டு வந்ததையும் பொருட்படுத்தாமல் தமது அரசாங்கம் ஒரே மூச்சில் பயங்கரவாதத்தை அடக்கி, மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது.
இவ்விதம் நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் எமது அரசாங்கத்தைப் பார்த்து ஒருசாரார் வேண்டுமென்றே சேற்றை அள்ளி வீசுகிறார்கள். இந்த அரசாங்கம் சகோதரர்களின் கம்பனி என்றும் இந்த அரசாங்கத்தால் எதனையும் சாதிக்க முடியாதென்றும் அவர்கள் நாட்டில் போலிப் பிரசாரங்களையும் செய்து வருகிறார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
முன்பு இலங்கையில் பயங்கரவாதிகளால் நாட்டின் நாலா பக்கங்க ளிலும் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்ட போது மெளனம் சாதித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகம், இன்று ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக குண்டுகளை வெடிக்கச் செய்து எங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, எவர் எத்தகைய பிரசாரங்களை செய்தாலும் எனது அரசாங்கம் எங்கள் நாட்டை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக மாற்றுவதை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாதென்று அறிவித்தார்.
அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து ஒரு மணித்தியாலத்தில் இலங்கைக்கு வந்து விட்டாலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு க்கு தரைப்பாதை மூலம் பயணிப்பதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கின்றன என்று விசனம் தெரிவித்தார்.
எங்கள் நாட்டுக்கு முதன் முதலில் விமானம் மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டுமாயின் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அதிவேக நெடுஞ்சாலையை ஆரம்பிப்பது அவசியம் என்று கருதியதனால் தான் அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் தாண்டி இதனை அமைத்திருக்கிறதென்று சொன்னார்.
இலங்கைக்கு வருகை தந்தவுடன் வெளிநாட்டவர்கள் சுமார் 20 முதல் 25 நிமிடங்களில் கொழும்பு மாநகரத்திற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் சென்றடைவது எங்கள் நாட்டின் முதலீட்டுத் துறைக்கும் வெளிநாட்டு சந்தை வாய்ப்பை அதிகரிப்ப தற்கும் பேருதவியாக அமைவது திண்ணம்.
![Colombo-Katunayake-Expressway600-580x246[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/colombo-katunayake-expressway600-580x2461.jpg?w=580&h=246)
Leave a comment