யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்காவுக்கான தூதர் மைக்கேல் சிசான் நேற்று யாழ்பாணம் சென்றிருந்தார். அவரை சந்தித்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விக்னேஷ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் மறுத்துள்ளார்.
ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment