நாக்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணித் தலைவர் பெய்லி உலக சாதனை

baily– MJ

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய  அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி 156  ஓட்டங்கள் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அவுதிரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச  ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிக்கி பொண்டிங் 140  ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இத் தொடரில் பெய்லி இதுவரை 5 ஆட்டங்களில் களம் இறங்கி 474 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரில் அதிக  ஓட்டங்கள் எடுத்தவர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு சிம்பாப்வே வீரர் ஹமில்டன் மசகட்சா 2009-ம் ஆண்டு கென்ய தொடரில் 467  ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இரு நாடுகள் இடையிலான தொடரில் அதிக  ஓட்டங்கள் குவித்த அணித் தலைவரும் பெய்லி தான். முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மொத்தம் 367 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் பெய்லிக்கு கிடைத்துள்ளது. அவர் 2013- ஆண்டில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1094  ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சிரிக்கும் புயல், தளராத நம்பிக்கை, எச்சந்தர்ப்பத்திலும் அணியை திசைதிருப்பும் துடுப்பு இவ்வாறே பல வர்ணணைகளுக்குச் சொந்தக் காரர் ஜோர்ஜ் பெய்லி! அவருக்கான எதிர்காலம் இன்னும் காத்திருக்கின்றது என்பதைவிட அவுஸ்திரேலியா, பெய்லியில் தங்கியிருக்கிறது என்பதுதான் இன்றைய அவுஸ்திரேலிய மக்களின் கனவு!!

012249-george-bailey[1]

Published by

Leave a comment