பொதுநலவாய சாசனம் மகாராணியின் கையெழுத்துடன் நேற்று வெளியீடு

commonகொழும்பு: 2013ம் ஆண்டுக்கான பொது நலவாய சாசனம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பொதுநலவாய அமைப்பின் கெளரவ தலைவி இரண்டாவது எலிசபெத் மகாராணியின் கையொப்பத்துடன் இந்த அதிகாரபூர்வ பத்திரம் நேற்று வெளியிடப்பட்டது.

Charter of the Commonwealth என்ற பெயரில் இந்த கையேடு வெளியிடப் பட்டுள்ளது.

ஜனநாயகம், மனித உரிமைகள், சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, சகிப்புத் தன்மை, மரியாதை மற்றும் புரிந்துணர்வு, சுதந்திரத்தின் வெளிப்பாடு, அதிகாரப் பகிர்வு, சட்டவிதிமுறைகள், நல்லாட்சி, நிலையான அபிவிருத்தி, சுற்றாடல், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உணவு மற்றும் வதிவிடம் தொடர்பான அணுகுமுறை, பாலின சமத்துவம், பொதுநலவாயத்தில் இளைஞர்களுக்கான முக்கியத்துவம், சிறிய நாடுகளின் தேவைகள் குறித்து இனங்காணுதல், சிவில் சமூகத்தின் பங்களிப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் தேவைகளை அங்கீகரித்தல் போன்ற 16 விடயங்களை உள்ளடக்கியதாக கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

கையேட்டின் இறுதியில் பொதுநலவாய அமைப்பின் செயலர் நாயகம் கமலேஷ் சர்மா கை யெழுத்திட்டார். tk

Published by

Leave a comment