மட்டக்களப்பு: கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை சுவாமிநடராஜனந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ்.பிரணாவன், சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதித் தலைவர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராசாகிபு உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவின் சிறப்பு மலரான சிவானந்தன் மலரின் சிறப்பு பிரதியை பாடசாலையின் பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராசாகிபுக்கு மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி வழங்கி உத்தியோகபூர்வமாக மலரை வெளியிட்டு வைத்தனர்.
இங்கு மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
![DSC06363[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dsc063631.jpg?w=150&h=112)
![DSC06363[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dsc063631.jpg?w=624&h=468)
![DSC06385[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dsc063851.jpg?w=624&h=468)
![DSC06392[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dsc063921.jpg?w=624&h=468)
Leave a comment