குறுகிய காலத்துக்குள் நாடு கண்டிருக்கின்ற வளர்ச்சியை முழு சர்வதேசமும் பார்க்க வேண்டும்- பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி- இல்மி அஹமட் லெவ்வை

ILMI ahamed lebbe– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொதுநலவாய நாடுகளின் மகாநாடு நமது இலங்கைத் திருநாட்டில் நடைபெறுவது நாட்டுமக்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியனை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவதற்கு எமது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

 மூன்று தசாப்தங்களாக ஓடிய இரத்த ஆறு முழுமையாக நிறுத்தப்பட்டு இன்று நவீன மகாநாட்டு மண்டபங்கள் ,புதிய விமான நிலையம், துறைமுகம் மற்றும் யாருமே கற்பனையில் கூட எதிர்பார்த்திராத அதிவேகப்பாதை ,மேம் பாலங்கள் என்று, நாடும் மக்களும் அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற  இச்சூழ்நிலையில் இந்த மகாநாடு இலங்கையில் நடைபெறுவது முழுநாட்டு மக்களுக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளது.

அது மாத்திரமல்லாது குறிப்பிட்ட காலத்துக்குள் நாடு கண்டிருக்கின்ற இவ் வளர்ச்சியை முழு சர்வதேசமும் பார்த்து  மேலும் அபிவிருத்திக்கு உதவுவதற்கான மூலக்கல்லாகவும் இது அமையும்.

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இன்று பெரும் எதிர்பார்ப்போடு பேசப்படுகின்ற இந்தமகாநாடு முழுவெற்றியினை பெற்றுத்தரவேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.

 அத்தோடு தலைமைத்துவ பொறுப்பை ஏற்க இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் எமது வாழ்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கின்றோம் என  காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.

ILMI ahamed lebbe
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை

Published by

Leave a comment