‘மௌனத்தின் பின்னரான கவிதை’ நூல் வெளியீடு

nb2ரைஸ்

கிண்ணியா: நிகழ் காலம் சஞ்சிகையின் ஆசிரியர் நாசிக் மஜீதின் மௌனத்தின் பின்னரான கவிதை நூல் வெளியீடு நேற்று நூலாசிரியர் நாசிக் மஜீத் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இவர்களுடன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் கிண்ணியா கிளை தலைவர் ஹிதாயதுள்ளாஹ், கிண்ணியா நகரசபை பிரதி தவிசாளர் எம்.சி.சபறுள்ளாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நூல்களை வெளியிடும் நூலாசிரியர்கள் நூல்களை வெளியிட்ட பின் அவர்களுக்கு ஏற்படும் கவலையினையும் அச்சிடப்பட்ட நூல்கள் அலுமாரிகளில் தூங்கிக் கொண்டிருப்பதையும் நிகழ்வின் சுருக்கமாக காணக் கூடியதாக இருந்தது. இது மாற வேண்டிய ஒன்றாக வாசகராகிய நாம் சுவைஞர்களாகிய நாம் உணர்ந்து நூலாசிரியர்களுக்கு ஊக்கமளிப்பதோடு ஆர்வமூட்டுபவர்களாகவும் இருக்கவேண்டியது அவிசியமாக உள்ளது. இவ்வெளியீட்டு நிகழ்வின் போது கிண்ணியா எழுத்தாளர்கள், கவிஞர்கள், வெளி மாவட்டங்கிளிலிருந்து வருகை தந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment