முகைதீன் மூத்தோர் சங்கம் சிறந்த கிராமிய முதியோர் சங்கமாகத் தெரிவு

Mohidee,-Elders.-12gifவார உரைகல்

காத்தான்குடி: 2013ம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த கிராமிய முதியோர் சங்கத்தினை தெரிவு செய்யும் போட்டியில் புதிய காத்தான்குடி கிழக்கு 167 டீ கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும் முகைதீன் மூத்தோர் சங்கம் இரண்டாவது இடத்தினைப் பெற்று சிறந்த கிராமிய முதியோர் சங்கமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தெரிவுக்கான சான்றிதழ் பத்திரம், நினைவுச் சின்னம் மற்றும் பணப்பரிசில் என்பவற்றை வழங்கும் நிகழ்வு இன்று 18ம் திகதி திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மா நகர மண்டபத்தில் நடைபெற்றபோது இச்சங்கத்தின் செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜனாப் கே.எம்.எம்.ஏ. காதர், மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் திரு சோ. ரங்கநாதன் அவர்களிடமிருந்து தமது சங்கத்திற்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட சர்வதேச முதியோர் தினப் போட்டியில் இச்சங்கம் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Moothor Sangam -1

Published by

Leave a comment