கட்டார் வைரஸ் காய்ச்சல்: வாழைச்சேனை சகோதரர் மரணம்

janasaDHA-86

டோஹா: கட்டாரில் தொழில்புரிந்து வந்த மட்டக்களப்பு, வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லிம் சகோதரர் ஒருவர் நேற்று மாலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு சில நாட்களாக ஏற்பட்டிருந்த தொடர் காய்ச்சலை அடுத்து, வைத்தியசாலைக்கு அவரது நண்பர்களால் கொண்டு செல்லப்படும்போது, அங்கு உயிரிழந்துள்ளார்.

திருமணமான இச்சகோதரருக்கு குழந்தை ஒன்றும் இருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிலும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததுடன் பலரை பலியெடுத்திருந்தது.

மத்திய கிழக்கில் தற்பொழுது ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களை அடுத்து காய்ச்சல், இருமல் நோய்கள் பரவலாக ஏற்படுவது வழக்கம். எனினும் தனக்கு ஏற்படும் நோய்களுக்கு அசமந்தத்தனமாக இருக்காது உடனடியாக வைத்தியரை நாடுமாறு கட்டார் சகோதரர்கள் கேட்கப்படுகின்றனர்.

Published by

Leave a comment