Category: Your Kattankudy
-
அரசியலில் குதிக்கிறார் ஹிருனிகா
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப் பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்தி ரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வழங்கியுள்ளார்.
-
ஈராக் விவகாரம்: பிரித்தானிய இராணுவத் தளபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
லண்டன்: ஈராக்கில் தடுப்புக் காவல் கைதிகளை துன்புறுத்தி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு பிரிட்டிஷ் இராணுவ தளபதி ஜெனரல் சேர். பீட்டர்வோல் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான ஜெப் ஊன் எடம் இங்ரம் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பயணிக்கப்போகும் பாதை..!! முஸ்லிம்களை தீவிர வாதத்திற்குள் தள்ள நினைக்கும் பௌத்த பேரினவாத சக்திகள்!
முஹம்மது காமில். உலக வரைபடத்தில் இலங்கை தீவானது ஆசியாக் கண்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் பூமத்திய ரேகைக்கு வடக்காக 6° 54′N கிழக்காக 79° 54′E யில் நான்கு பக்கமும் கடலினால் சூழப்பெற்ற ஒரு அழகிய தீவாகும்.
-
மூதூரில் PMGGயினால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன
PMGG ஊடகப்பிரிவு மூதூர்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மற்றுமொரு சமூக வேலைத்திட்டங்களில் ஒன்றாக வறிய மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு ஒன்று நேற்று மூதூர் ஹபீப் நகர், உமர் பாறூக் வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
-
இரத்ததான அழைப்பு
MSW காத்தான்குடி: காத்தான்குடியில் சமூக சேவைகளை ஆற்றி வரும் ”சமூக நலன்புரி அமைப்பின்” (Movement For Social Wellness) இரண்டாவது இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலத்தில் இடம்பெறவுள்ளது.
-
கிழக்கை சொர்க்கபுரியாக்கும் சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம்
கொழும்பு: கிழக்கு மாகாணத்தின் பல்துறை சார்ந்த மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட “சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம்” எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அதி விமரிசையாக நடைபெறவுள்ளது, “கிழக்கில் முதலீடு செய்யுங்கள்” என்ற தொனிப் பொருளில் இது நடைபெறுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
-
தேசத்துரோக செயலில் சில மதகுருமார்
கொழும்பு: மதகுருமார் தமது மதம் சார்பான விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தாம் அரசியலில் நேரடியாகக் களமிறங்கி அரசியல்வாதியாக தம்மை மாற்றிக் கொண்டு ஓர் அரசியல்வாதி போன்று அரசியலில் ஈடுபட வேண்டும்.
-
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன -தமிழ் தேசிய கூட்டமைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (11.1.2014) சனிக்கிழமை மதியம் மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் நடைபெற்றது.
-
மாணவ சமூகத்தின் கல்வி தொடர்பில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் தில்லையடி: கற்றவர்களே மாணவ சமூகத்திற்கு முன்மாதிரி மிக்கவர்களாக இருக்க வேண்டும் அதன் மூலம் அவர்களை அதன்பால் இட்டுச் செல்ல முடியும் என்று கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தில்லையடி சதாமியா புரத்தில் தெரிவித்தார்.
-
லண்டனில் இலங்கைப் பெண் இரு பிள்ளைகளுடன் மரணம்!
லண்டன்: லண்டனில் பிரண்ட் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் இறந்துகிடக்க காணப்பட்டுள்ளார். வுட்கிரஞ்ச் குளோஸ் என்னும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 33 வயதான தாய், அவரது 5 வயது மற்றும் 9 மாதங்கள் நிறைந்த இரு மகன்மார் ஆகியோரின் சடலங்கள் வியாழனன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார்
8 வருடங்கள் கோமா நிலையில் இருந்த இஸ்ரேலிய முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் அவர்கள், தனது 85வது வயதில் காலமானார். ( 1928 ஆம் ஆண்டு, பெப்ரவரி 27 இல் அவர் பிறந்தார்). 2006 ஜனவரி முதல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்தது.
-
17 இலட்சம் ரூபாய் பணத்தை தீயிட்டு எரித்த சகோதரிகள்!
– SHM இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான, அதே சமயம் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. இரு சகோதரிகள் வங்கியிலிருந்து ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்து அதை தீவைத்து எரித்து விட்டனர். அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.