Category: Your Kattankudy
-
சமூக நலன் பேணும் அமைப்பின் 2 இரண்டாவது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 19-01-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் இம்தியாஸ் தலைமையில நடைபெற்றது.
-
காத்தான்குடி மட்-அல்ஹிறா வித்தியாலயத்தில் தேசிய மீலாத் நபி தின நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கல்வி அமைச்சின் விஷேட சுற்று நிருபத்துக்கு அமைய தேசிய மீலாத் நபி தின நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கமைவாக காத்தான்குடி மட்-அல்ஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் நபி தின நிகழ்வு கடந்த திங்கட்கிழமை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் அப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.சத்தார் தலைமையில் நடைபெற்றது.
-
தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் கண்காணிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு
நிவ்யோர்க்: அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென் அமெரிக்கா பற்றிய இரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழ முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகம் முழுதும் தினந்தோறும் கையடகக்க தொலைபேசி பயன்படுத்தும் 20 கோடி குறுந்தகவலை
-
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பு நிலையம் வவுனியாவில்
வவுனியா: இலங்கையில் யுத்தகாலத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோருக்காக, வடமாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பில் முதலாவது சுகாதார பராமரிப்பு நிலையம் வவுனியா பம்பைமடுவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு நிலையத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
-
மன்னார் மனித புதைகுழியில் மேலதிக மனித உடல்கள் கண்டுபிடிப்பு!
மன்னார்: இலங்கையின் வடமேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்சய வைத்தியரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
மாணிக்கக்கல் வைத்திருந்த இருவர் கைது
வாழைச்சேனை: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல்லை தம் வசம் வைத்திருந்த இருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
மட்டக்களப்பில் வெள்ளநீரால் உடைக்கப்பட்ட மாவடி ஓடை பாலம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குளத்தின் வான்கதவு வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புருட்டுமான் ஓடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு மற்றும் மாவடி ஓடை ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர்
-
‘சிறந்த மாணவர்களை முதலில் உருவாக்குவது பெற்றோர்களே’ கிண்ணியா மத்திய கல்லூரியின் முதலாம் தர மாணவர்கள் அனுமதி நிகழ்வில் நகரபிதா ஹில்மி தெரிவிப்பு
ரைஸ் கிண்ணியா: சிறந்த மாணவர்களை முதலில் உருவாக்குவது பெற்றோர்களே அவர்களை இனம் கண்டு வளப்படுத்துவதுதான் பாடசாலையும் ஆசிரியர்களுமாகும் என கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுக்கும் இலங்கைக்கான நோர்வேத் தூதருக்குமிடையிலான சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுக்கும் இலங்கைக்கான நோர்வேத் தூதருக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வகுப்பறை திறப்பு விழாவும்
எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வகுப்பறை திறப்பு விழாவும் வித்தியாலய அதிபர் எம். ஏ. சி. எம். நியாஸ் தலைமையில் இடம்பெற்றது. சென்ற வருடம் 1ம் தரத்திற்கு சேர்த்த மாணவர்களின் பெற்றோர்களால் பாடசாலையின் நன்மை கருதி அவர்களின் பங்களிப்பினூடக
-
அந்நூர் வித்தியாலய முதலாம் தர மாணவர் அனுமதியும் பரிசளிப்பும்
ரைஸ் கிண்ணியா: கிண்ணியாவின் பல பாடசாலைகளில் வியாழக்கிழமை முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது. அந்நூர் வித்தியாலயத்திலும் பாடசாலை அதிபர் ஏ. ஆர். எம். ஜிப்ரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கிண்ணியா சூரங்கல் காந்தி நகர் தி.கிண்ணியா அந்நூர் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.