கிழக்கை சொர்க்கபுரியாக்கும் சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம்

sri-eastern[1]கொழும்பு: கிழக்கு மாகாணத்தின் பல்துறை சார்ந்த மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட “சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம்” எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அதி விமரிசையாக நடைபெறவுள்ளது, “கிழக்கில் முதலீடு செய்யுங்கள்”  என்ற தொனிப் பொருளில் இது நடைபெறுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

சிறப்பு அதிதிகளாக அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, றவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆளுநர் மொஹான் ஜயவிக்ரம பெரேரா, மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

உள்நாட்டு வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் சுமார் 300 பேர் வரை இவ்வரங்கில் பங்குபற்றவுள்ளனர்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கத்தை நடாத்துகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்கு முதலீட்டு நிறுவனம் (கிலியி) சுற்றுலா அதிகார சபை மாநாட்டு மன்றம், மட்டு நகர் வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளனம், இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் போன்றவை ஒத்துழைப்பு நல்குகின்றன.

கிழக்கு மாகாணம் முதலீட்டுக்குப் பொருத்தமான கேந்திர மையமாகத் தற்போது விளங்குகின்றது. அதன் காரணமாக அரசு வழங்கும் பல்வேறு வசதிகளும் இயற்கையாக இங்கு அமைந்த வளங்களும், முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் கிழக்கு மாகாண அமைச்சானது விவசாயம், கால்நடை, மீன்பிடி, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளை வரவேற்கிறது. தொழில் அபிவிருத்தி மூலமாக கிழக்கின்ற வள மேம்பாட்டை அதிகரிப்பதே அரசினதும் அமைச்சுக்களினதும் நோக்கமாக இருக்கிறது.

கிழக்கில் முதலீடுகள் அதிகரிப்பதால் பிராந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும். முதலீட்டாளர்கள் பலன் பெறுவர். பிராந்தியத்தில் வாழும் மக்களின் வாழ்வும் சிறக்கும். 2016 ஆம் ஆண்டின் 2/2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாசிக்குடா, நிலாவெளி, குச்சவெளி, அறுகம்மை போன்ற சிறப்பு மிக்க சுற்றுலா மையங்களுடன் புதிய கரையோரச் சுற்றுலா மையங்களை உருவாக்கவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய நவீன வசதிகளை ஏற்படுத்தவும் மாகாணஅமைச்சு திட்டமிட்டுப் பணியாற்றுகின்றது. இயற்கையான வளங்களைக் கொண்டு நெல்லுற்பத்தியில் சிறந்து விளங்கும் கிழக்கு மாகாணம் உள்நாட்டு மக்களின் உணவுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் சிறப்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உணவு உற்பத்திக்கு உகந்த பிரதேசமாகக் கிழக்கு மாகாணம் அமைந்துள்ளதால் 75 ஆயிரம் ஹெக்டயர் வயல்களில் அமோக விளைச்சல் பெறப்படுகின்றது. எனினும் விவசாய மேம்பாட்டுக்கும் கால்நடை அபிவிருத்தி, பாலுற்பத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் கரையோரப் பிரதேசத்திலே 30 சதவீதம் கிழக்கு மாகாணத்திலே உள்ளது. இருந்த போதும் கடந்த 30 ஆண்டுகால பயங்கரவாத நடவடிக்கைகளால் மீன்பிடித்துறை போதிய வளர்ச்சி காணாது பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மீன்பிடித்துறை சார்ந்த முதலீட் டுக்கான தேவைகள் நிறை யவே உள்ளன.

ஆண்டுதோறும் 36 மில்லியன் ரூபாவுக் கான பால்மா நம் நாட்டுக்கு இறக்குமதி யாகின்றது. கிழக்கு மாகாணத்தில் பாற்பண்ணைகளில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. நாட்டில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலில் 17 சத வீதத்தையே கிழக்கு மாகாணம் வழங்கி வருகின்றது. கிழக்கில் 4 இலட்சம் பசுக் கள் உள்ளன. ஒவ்வொரு பசுவில் இருந் தும் தினமும் 1-2 லீற்றர் பாலே பெறப் படுகின்றது. 10-15 லீட்டர் தினமும் தரக்கூடிய உயர்ந்த பசுக்களை வளர்த்து பால் உற்பத்தியை அதிகரிக்க முத லீட்டாளர்கள் தேவையாக உள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்படாத அபி விருத்தி முயற்சிகள் பல உள்ளன. இவற்றுக்கும் முதலீட்டாளர்கள் தேவை ப்படுகின்றனர்.

சமுதாய நலனை மேம்படுத்தும் ஒவ் வொரு துறைகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசின் கொள்கை யாகவுள்ளது. அரசின் இக்கொள் கைக்கமைவாகக் கிழக்கு மாகாணம் தனது உச் சக்கட்டப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இந்த முதலீட்டு ஊக்கு விப்பு அரங்கத்தின் குறிக் கோளாகும். கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நkர் அவர்களின் முன்னேற்றகரமான முயற்சியின் பயனாக உருவானதே இந்த முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம் எனக் கூறினால் அதில் மிகையொன்றுமில்லை.

இத்தகைய அரிய முயற்சியில் ஈடுபட்ட மாகாண அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் அரசினதும் கிழக்கு மாகாண மக்களினதும் பாராட்டுக்குரியவர் என்று கூறலாம்.

இந்த முதலீட்டு ஊக்குவிப்பு அரங்கம் தொடர்பிலான செய்தியாளர் மாநாடு கொழும்பு தாருஸ்ஸலாமில் நடைபெற்ற போது இந்தக் கருத்திட்டத் தின் கர்த்தாவும் மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் இது தொடர்பில் விரிவான விளக்கமளித் தார். மாகாண அமைச்சின் செயலாளர் க. பத்மநாதனும் இதில் பங்கேற்றார்.

வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச மாநாடு முதலீட்டுத்துறையில் பாரிய திருப்பு முனையெனவும் இதன் மூலம் முத லீட்டாளர்கள் விரைவான பலாபலன்களை அடைய சந்தர்ப்பம் உள்ளது எனவும் ஹாபிஸ் தெரிவித்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டுத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுவர இது வாய்ப் பளிக்கும் எனவும் தெளிவு படுத்தினார்.

இவ்வாறு அபிவிருத்தி தொடர்பாக நடைபெறுகின்ற அனைத்து அரங்கங்களைப் போலல்லாது இந்த அரங்கம் புதுமையான முறையில் வித்தியாசமானதாக நடைபெறு கின்றது. வழமையாக அபிவிருத்தி தொடர்பான மாநாட்டிலே ஆலோ சிக்கப்படும் அல்லது தீர்மானிக்கப்படும் அம்சங்கள் வெளிக் கொணரப்பட்ட பின்னரே அவற்றுக்கான சாத்தியக் கூற்றறிக்கை ஆராயப்படும். ஆனால் இதற்கு மாறாக இங்கே நடைபெறுகின்ற ஊக்குவிப்பு அரங்கத்தின் அபிவிருத்திக்கும் முத லீட்டுக்குமான சாத்தியக் கூற்றறிக்கைகள், (பிலீasibility ஞிலீports) ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. அமைவிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. அவை சார்ந்த விளக்கங்களும் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே இத்தகைய திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை முதலீட்டாளர்கள் ஏலவே தெரிந்து கொள்ளவும் தீர்மானிக்கவும் இந்த அரங்கம் ஏதுவாகவுள்ளது.

வடக்கும் கிழக்கும் யுத்த பீதியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இங்கே வாழுகின்ற இளைஞர் சமுதாயம் தமக்குப் பொருத்தமான தொழிலின்றி வேலையில்லாத் திண்டாட்டத்தை விட்டு நீங்க முடியாத நிலையில் உள்ளனர். மனித வளமும் திறமையும் உள்ள இளைஞர் சமுதாயத்துக்கு கிழக்கிலே தொழில் வாய்ப்பு அளிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த அரங்கம் ஏற்படுத்துகின்றது. சுமார் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த முதலீட்டு அரங்கம் மூலம் தொழில் வாய்ப்பு அளிக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் தெரிவிக்கிறார்.

– தினகரன்

Published by

Leave a comment