மூதூரில் PMGGயினால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன

unnamed (5)PMGG ஊடகப்பிரிவு

மூதூர்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மற்றுமொரு சமூக வேலைத்திட்டங்களில் ஒன்றாக வறிய மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு ஒன்று நேற்று மூதூர் ஹபீப் நகர்,  உமர் பாறூக் வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், மூதூர் செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் 65 வறிய மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment