தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுக்கும் இலங்கைக்கான நோர்வேத் தூதருக்குமிடையிலான சந்திப்பு

unnamed (5)பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுக்கும் இலங்கைக்கான நோர்வேத் தூதருக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள இளைஞர் அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின் எதிர்கால உயர் கல்வி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது எனவும் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் பின்னர் மன்றத்தின் தலைவர் நோர்வே தூதுவருக்கு நினைவுச்சின்னம் வழங்குவதைக் காணலாம் .மன்றத்தின் பணிப்பாளர்களில் ஓருவரான மிலிந்த ராஜபக்கஷவும் கலந்து கொண்டார். 

unnamed (5)

Published by

Leave a comment