வாழைச்சேனை: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல்லை தம் வசம் வைத்திருந்த இருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டையை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த வாழைச்சேனைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனையிட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 260 கிராம் 990 மில்லி கிராம் எடையுள்ள மாணிக்கக்கல் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.VK
Published by

Leave a comment