கிண்ணியா: சிறந்த மாணவர்களை முதலில் உருவாக்குவது பெற்றோர்களே அவர்களை இனம் கண்டு வளப்படுத்துவதுதான் பாடசாலையும் ஆசிரியர்களுமாகும் என கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவின் பல பாடசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமையும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.ரூமி தலைமையில் இந்நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியிலும் இடம்பெற்றது. முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.
நிகழ்வின் போது முதலாம் தர மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்;மி மஹ்ரூப், கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, கல்லூரி அதிபர் ஏ.ஜே.எம்.ரூமி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment