கிண்ணியா: கிண்ணியாவின் பல பாடசாலைகளில் வியாழக்கிழமை முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது. அந்நூர் வித்தியாலயத்திலும் பாடசாலை அதிபர் ஏ. ஆர். எம். ஜிப்ரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கிண்ணியா சூரங்கல் காந்தி நகர் தி.கிண்ணியா அந்நூர் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.
நிகழ்வின் போது புதிய புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் வரவேற்றதோடு முதலாம் தர மாணவர்களுக்கு பரிசில்களையும் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் வழங்கி வைத்தார். இதன்போது ஐ.எப். நியாஸ், ஆசியரியர்கள், மணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முதலாம் தர மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர் ஆர்.எம்.அன்சார் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment