காத்தான்குடி: காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வகுப்பறை திறப்பு விழாவும் வித்தியாலய அதிபர் எம். ஏ. சி. எம். நியாஸ் தலைமையில் இடம்பெற்றது. சென்ற வருடம் 1ம் தரத்திற்கு சேர்த்த மாணவர்களின் பெற்றோர்களால் பாடசாலையின் நன்மை கருதி அவர்களின் பங்களிப்பினூடக மேற்கொள்ளப்பட்ட இரும்பினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தினை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம். எஸ். எம் சுபைர் திறந்துவைத்தார்.
1ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை ஏனைய மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்பதையும் ஆசிரியைகள் மாணவர்களுக்கு இனிப்புப் பண்டம் வழங்கி வரவேற்பதையும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
Published by

Leave a comment