Category: Your Kattankudy
-
29வது ஸ்ரீலங்கா யூத் ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர் லீக் சுற்றுப் போட்டி
பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: 29வது ஸ்ரீலங்கா யூத் ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர் லீக் சுற்றுப் போட்டி 10-02-2014 நேற்று திங்கட்கிழமை மஹரகம இளைஞர் நிலைய உள்ளக அரங்கில் ஆரம்பமானது. இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 28 ஆண், பெண் அணிகள் கலந்து கொள்கின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் சுப்பர் லீக் போட்டிகள் இடம்பெறுகின்றன.
-
யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு விஷேட ஹெலிகொப்டர் விமானம் மூலம் காத்தான்குடி விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
-
அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஐந்து சகோதரர்கள் இன்று காலை (11-02-2014) மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கௌரவ NMM. அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவான்களாக (தீவு முழுவதற்குமான ) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.
-
‘ஒரு வருடமாக யுவன் இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார்’
– S-90 சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு வருட காலமாக இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுவது பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
-
கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தாய்லாந்து பயணம்
– ரைஸ் கிண்ணியா: தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறவிருக்கும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல்; சம்பந்தமான ஒருவாரகால விசேட கருத்தரங்கில் கலந்து கொள்லவென கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் நேற்றிரவு தாய்லாந்து பயணமானார்.
-
‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ காத்தான்குடியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/02/2014 அதாவது புதன்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் (தாருல் உலூம் இஸ்லாமியா – தென் ஆபிரிக்கா)
-
கிழக்கு மாகாணத்தில் திறமையின் அடிப்படையில் அல்லாமல் இன ரீதியான விகிதாசார அடிப்படையில் நியமனங்களை வழங்க முயன்றமையினாலேயே தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது – தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களை நிரப்பவதற்காக மேற்கொள்ளப்பட்ட போட்டிப் பரீட்சையும் அதனோடு இணைந்ததாக மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர்முகத் தேர்வு நியமனம் வழங்களில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் விண்ணப்பதாரி ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும் இம் முகாமைத்துவ
-
தனது விளையாட்டுத் திறமைகளைக் கடலில் கரைக்கும் காத்தான்குடி இளைஞர்கள்
AK-87 காத்தான்குடி: காத்தான்குடிக்கு என்று தனி விளையாட்டு மைதானமாகமத் திகழ்ந்து வந்த காத்தான்குடி பொது மைதானம், தற்பொழுது இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்டு, ஓர் சிறு முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு பணியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால்
-
தமிழ் மக்களோடு இணைந்து வாழத்தயார்- உன்னிச்சை இருநூறுவில் கிராமத்து முஸ்லிம்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் உன்னிச்சை: உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகமும் இருநூறுவில் நலன்புரிச்சங்கமும் இணைந்து – நலன்புரிச்சங்க ஆலோசகரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் காத்தான்குடி 167சி பல்நோக்கு கட்டடத்தில் நேற்று 09.02.2014 ஞாயிற்றுகிழமை மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் தங்களது சம்மதத்தினை தெரிவித்தனர்.
-
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
தில்லையடியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் புத்தளம்: வடக்கு முஸ்லிம்களின் மீ்ள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அந்தப்பணிகளை நாம் கட்சியமைத்து செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுடன் பேசியதாகவும் கூறினார்.
-
காத்தான்குடி வாவியில் மீண்டும் முதலையின் அட்டகாசம்! பொது மக்களிடம் அவதானம் தேவை
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி வாவியில் சுமார் 15 அடி நீளமுடைய முதலையொன்று நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி 3 இமாம்கொமைனி வீதி முடிவடையும் சந்தியிலேயே இம்முதலை நடமாடித்திரிவதாகவும் இரவு நேரங்களில் வாவியிலிருந்து கரைக்கு வந்து செல்வதாகவும் தான் அதனை நேரில் கண்டதாகவும் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் யூ.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.
-
நகரபிதாவின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் நகரசபைக்கு வருகை
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதி நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் முன்னெடுப்புக்களில் தற்போது வெகுவாக அபிவிருத்தி கண்டுவரும் நிலையில மேலும் கிண்ணியாவினை அபிவிருதிப்பாதையில் கொண்டு செல்லும் பொருட்டு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் யொஹான் செனவிரத்தின கிண்ணியா நகரசபைக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.