தனது விளையாட்டுத் திறமைகளைக் கடலில் கரைக்கும் காத்தான்குடி இளைஞர்கள்

cricket1AK-87

காத்தான்குடி: காத்தான்குடிக்கு என்று தனி விளையாட்டு மைதானமாகமத் திகழ்ந்து வந்த காத்தான்குடி பொது மைதானம், தற்பொழுது இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்டு,  ஓர் சிறு முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு பணியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் காத்தான்குடி இளைஞர்கள் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்ட முடியாமல இன்று தத்தளித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கூட எமது இணையத்தளத்தில் தற்போதய காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தின் நிலையினை விபரமாக எழுதியிருந்தோம்.

ஓர் ஊரில், ஓர் நாட்டில் வாழும் இளம் சமுதாயம் இன்றியமையாதது. கல்வியும், விளையாட்டும் இளைஞர் சமூகத்துக்கு சம பலங்கள்.

ground5
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கின் தற்போதய நிலை

 

ன்று வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் எமது சமூகத்தில் இருப்பவர்களில் அநேகமானவர்கள் காத்தான்குடி பொது மைதானத்தில் ஓர் காலத்தில் தங்களை விளையாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல சாதனைகளைப் படைத்து காத்தான்குடிக்கும் இதன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தவர்கள் காத்தான்குடி பொதுமைதானத்தில் தங்களது காலடியை வைத்தவர்கள் என்பதும் வரலாறுகள்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்  ஹிஸ்புல்லாஹ் மைதானமாக பெயர் மாற்றப்பட்டு அதன் பின்னரும் பற்பல சிரேஷ்ட சுற்றுப் போட்டிகளும், ஏனைய விளையாட்டுப் போட்டிகளும் இம்மைதானத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

விளையாடக் கூடிய உகந்த நிலையில் இம்மைதானம் இருந்த போதிலும், எமது இளம் சமூதாயத்துக்கு வினளயாட அனுமதி வழங்காமையால் அவர்கள் இன்று காத்தான்குடியின் எல்லைகளில் தனியார் காணிகளில் விளயாடி வருகின்றனர்.

இதே போல், இன்னும் சில அணிகள் காத்தான்குடி கடற்கரையில் மண்ணுக்கும், கிறவலுக்கும், வீதிக்குமிடையில் தங்களது திறமைகளை கடலுக்குள் அர்ப்பணித்து வரும் பரிதாபத்தை காத்தான்குடி கடற்கரையில் காண முடிகிறது.

நிலைமை இவ்வாறு போனால் விளையாட்டில் காத்தான்குடி பிரகாசிக்க முடியாது. இளம் சமூகத்தின் விளையாட்டுச் சிந்தனைகளும், திறமைகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படும் பரிதாப நிலைகளும் ஏற்படும்.

cricket1
காத்தான்குடி கடற்கரையில் விளையாடும் இளைஞர்களின் ஓர் அணி

எனவே தயவு செய்து எமது இளம் சமூகத்தினர் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை ஓர் மைதானத்தில் வெளிப்படுத்தக்கூடிய வழிகளை ஏற்படுத்தி அதற்காக சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்டிருக்கும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கை எமது இளம் சமூகத்தின் விளையாட்டுத் தேவைக்காக விரைவில் திறந்துவிடுமாறு சம்பந்தப்பட்டவர்களை காத்தான்குடி விளையாட்டு வீரர்கள் சார்பாக மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

cricket2
காத்தான்குடி கடற்கரையில் விளையாடும் இளைஞர்களின் ஓர் அணி

Published by

Leave a comment